Ingredients: Foxtail Millet, Ghee, powdered jaggery.
தினை மா லட்டு:
தேனும் தினை மாவும் நம் முன்னோரின் ரகசியங்களில் ஒன்று, சுவை தேடி செல்லும் இக்காலத்தில் மாறிவரும் நாட்களாக பழமையில் புதுமை காண்போம். தினையில் பெண்களுக்கு பயன் தரும் வகையில் பெருமளவு சத்துக்கள் நிறைந்திருப்பதால் இதை இந்த மகளிர் தின சிறப்பு அம்சமாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
1. உண்மையில், இவை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும்
2. இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.
3. இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை,கோதுமை,ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
4.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
5. முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம்.
இந்த லட்டு வகை தேனுடன் கலந்த சுவையான ஒன்று என்பதால் அனைவரும் விரும்பு சுவைக்க கூடியதாக உள்ளது